பாதுஷா செய்வதற்கு முதலில் ஒரு பாத்திரம் எடுத்து அதில் 1 கப் அளவிற்கு மைதா சேர்க்கவும்.
மைதாவுடன் 1/4 டீஸ்பூன் சமையல் சோடா 1/4 டீஸ்பூன் பேக்கிங் பவுடர் ஒரு சிட்டிகை உப்பு 1/2 டீஸ்பூன் சர்க்கரை இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக கலக்கவும்.
சேர்த்த அனைத்தையும் கலந்தவுடன் 1/4 கப் அளவிற்கு நெய் சேர்த்து அதனுடன் மீண்டும் நன்றாக கலக்கவும்.
நெய் சேர்த்து கலந்தவுடன் அது பார்க்க பிரெட் கிராம்ப்ஸ் போல் இருக்கும் அதன் பிறகு சிறிது சிறிதாக அதில் தண்ணீர் சேர்த்து கலக்கவும்.
கலந்தவுடன் மாவை இழுத்தாள் இழுக்கக்கூடிய பதத்தில் இருக்க வேண்டும், இதுதான் பாதுஷா செய்வதற்கு சரியான பதம்.
பாதுஷா மாவை தயார் செய்த பிறகு 10லிருந்து 15 நிமிடங்கள் வரை ஊறவிட வேண்டும்.
பாதுஷா மாவு ஊறுவதற்குள் சர்க்கரைப்பாகு தயார் செய்து கொள்ளலாம்.
சர்க்கரை பாகை செய்ய ஒரு பாத்திரத்தில் 1 கப் அளவிற்கு சர்க்கரை மற்றும் 1/2 கப் அளவிற்கு தண்ணீர் சேர்க்கவும்.
சர்க்கரை முழுவதும் அந்த தண்ணீரில் கரைய வேண்டும், சர்க்கரை கரைந்து தண்ணீர் கொதிக்கும்போது அதில் ஒரு சிட்டிகை குங்குமப்பூ 1/4 டீஸ்பூன் ஏலக்காய் பொடி சேர்த்து நன்றாக கலக்கவும்.
பேக்கரி பாதுஷாவை போல் நிறம் வேண்டுமென்றால் ஒரு சிட்டிகை கேசரி பவுடர் சேர்த்துக் கொள்ளவும், ஆனால் இது கட்டாயமல்ல உங்களது விருப்பம் தான்.
மூன்றிலிருந்து ஐந்து நிமிடங்கள் சக்கரை தண்ணீரை நன்றாக கொதித்த பிறகு, சர்க்கரை பாகுகள் ஒற்றை சரம் நிலைத்தன்மைக்கு உருவாகும்(இதை கம்பி பதம் என்றும் கூறுவர்), உங்களுக்கு வேண்டுமென்றால் சிறிதளவு எலுமிச்சை சாறு இதில் சேர்த்துக் கொள்ளலாம்.
சர்க்கரைப் பாகை தயார் செய்த பிறகு அதை ஓரம் வைக்கவும் அதன் பிறகு ஊறவைத்த பாதுஷா மாவிலிருந்து சின்ன பந்து போல் எடுத்து அதை மெதுவடை போல் தட்டி கொள்ளவும்.
எல்லா மாவையும் தட்டி கொண்டபிறகு ஒரு கடாயில் எண்ணெயை சூடாக்கவும், ஒரு சிட்டிகை மாவை சேர்த்து சரிபார்க்கவும், அது உடனடியாக எழுந்தால் அது சரியான நிலை.
இப்போது மிதமான தீயில் வைத்து எண்ணெயில் பாதுஷாக்களை சேர்த்துக்கொள்ளவும், ஒரு பக்கம் பொன்னிறமானதும் மறுபுறம் திருப்பி போட்டு பொன்னிறமாக வறுக்கவும் (அதிக தீயில் வறுக்க வேண்டாம்).
இரண்டு பக்கமும் பாதுஷா பொன்னிறமாக வறுத்தப்பிறகு பாதுஷாக்களை எண்ணெயிலிருந்து எடுத்து எண்ணெயை வடித்து தட்டிற்கு மாற்றிக் கொள்ளவும்.
பின்னர் உடனடியாக தயாரிக்கப்பட்ட சர்க்கரை பாகில் சேர்க்கவும். இருபுறமும் நன்கு நனைத்து, 2 நிமிடம் மூழ்கியபிறகு அதிலிருந்து எடுத்து தட்டில் மாற்றவும், 2-3 மணி நேரம் வைத்தால் மிகவும் சுவையாக இருக்கும், அப்போதுதான் சர்க்கரை பாகு உள்ளே நன்றாக செட் ஆகும்.
இப்பொழுது பாதுஷா ரெடி பாதுஷாவை மகிழுங்கள்!