பாதுஷா ரெசிபி-BADUSHA | BALUSHAHI RECIPE IN 25mins

பாதுஷா இனிப்பு வகைகளில் மிகவும் முக்கியமான ஒன்று. பண்டிகைகளுக்கு ஏதாவது இனிப்பு வகைகள் செய்ய வேண்டுமானால் இந்த பாதுஷாவை செய்யலாம். பாதுஷாவை மைதா, வெண்ணெய் சேர்த்து வடை போன்ற வடிவத்தில் செய்து எண்ணெயில் வறுத்து, இறுதியாக சர்க்கரை பாகில் தோய்த்து தயாரிக்கப்படுகிறது.

பாதுஷா
Badusha Recipe in Tamil

சுவையும் இதன் அமைப்பும் முற்றிலும் வேறுபட்டாலும் தோற்றத்தில் இது மெருகூட்டப்பட்ட டோனட் போன்றது. டோனட் மென்மையான ரொட்டி போன்ற அமைப்பைக் கொண்டுள்ளது, அதே சமயம் பலுஷாஹி மென்மையான மற்றும் மெல்லிய அமைப்பைக் கொண்டுள்ளது.

பாதுஷா செய்முறை விளக்கம்:

Badusha

பாதுஷா-BADUSHA | BALUSHAHI RECIPE

BhavaniGajendran
பாதுஷா ஒரு பிரபலமான இந்திய இனிப்பு வகைகளில் ஒன்று, இது கண்டிப்பாக முயற்சி செய்ய வேண்டிய செய்முறையாகும்.
Prep Time 10 minutes
Cook Time 15 minutes
Total Time 25 minutes
Course Dessert
Cuisine Indian
Servings 5

Ingredients
  

 • பாதுஷா மாவு செய்ய தேவையான பொருட்கள்
 • 1 cup மைதா மாவு
 • 1/4 tsp பேக்கிங் சோடா
 • 1/4 tsp பேக்கிங் பவுடர்
 • 1 pinch உப்பு
 • 1/2 tsp சர்க்கரை
 • 1/2 cup நெய்
 • தேவையான அளவு தண்ணீர்
 • சர்க்கரை பாகு செய்ய தேவையான பொருட்கள்
 • 1 cup சர்க்கரை
 • 1/2 cup தண்ணீர்
 • 1 pinch குங்குமப்பூ
 • 1/4 tsp ஏலக்காய் 
 • 1 pinch ஃபுட் கலர்
 • தேவையான எண்ணெய்

Instructions
 

 • பாதுஷா செய்வதற்கு முதலில் ஒரு பாத்திரம் எடுத்து அதில் 1 கப் அளவிற்கு மைதா சேர்க்கவும்.
 • மைதாவுடன் 1/4 டீஸ்பூன் சமையல் சோடா 1/4 டீஸ்பூன் பேக்கிங் பவுடர் ஒரு சிட்டிகை உப்பு 1/2 டீஸ்பூன் சர்க்கரை இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக கலக்கவும்.
 • சேர்த்த அனைத்தையும் கலந்தவுடன் 1/4 கப் அளவிற்கு நெய் சேர்த்து அதனுடன் மீண்டும் நன்றாக கலக்கவும்.
 • நெய் சேர்த்து கலந்தவுடன் அது பார்க்க பிரெட் கிராம்ப்ஸ் போல் இருக்கும் அதன் பிறகு சிறிது சிறிதாக அதில் தண்ணீர் சேர்த்து கலக்கவும்.
 • கலந்தவுடன் மாவை இழுத்தாள் இழுக்கக்கூடிய பதத்தில் இருக்க வேண்டும், இதுதான் பாதுஷா செய்வதற்கு சரியான பதம்.
 • பாதுஷா மாவை தயார் செய்த பிறகு 10லிருந்து 15 நிமிடங்கள் வரை ஊறவிட வேண்டும்.
 • பாதுஷா மாவு ஊறுவதற்குள் சர்க்கரைப்பாகு தயார் செய்து கொள்ளலாம்.
 • சர்க்கரை பாகை செய்ய ஒரு பாத்திரத்தில் 1 கப் அளவிற்கு சர்க்கரை மற்றும் 1/2 கப் அளவிற்கு தண்ணீர் சேர்க்கவும்.
 • சர்க்கரை முழுவதும் அந்த தண்ணீரில் கரைய வேண்டும், சர்க்கரை கரைந்து தண்ணீர் கொதிக்கும்போது அதில் ஒரு சிட்டிகை குங்குமப்பூ 1/4 டீஸ்பூன் ஏலக்காய் பொடி சேர்த்து நன்றாக கலக்கவும்.
 • பேக்கரி பாதுஷாவை போல் நிறம் வேண்டுமென்றால் ஒரு சிட்டிகை கேசரி பவுடர் சேர்த்துக் கொள்ளவும், ஆனால் இது கட்டாயமல்ல உங்களது விருப்பம் தான்.
 • மூன்றிலிருந்து ஐந்து நிமிடங்கள் சக்கரை தண்ணீரை நன்றாக கொதித்த பிறகு, சர்க்கரை பாகுகள் ஒற்றை சரம் நிலைத்தன்மைக்கு உருவாகும்(இதை கம்பி பதம் என்றும் கூறுவர்), உங்களுக்கு வேண்டுமென்றால் சிறிதளவு எலுமிச்சை சாறு இதில் சேர்த்துக் கொள்ளலாம்.
 • சர்க்கரைப் பாகை தயார் செய்த பிறகு அதை ஓரம் வைக்கவும் அதன் பிறகு ஊறவைத்த பாதுஷா மாவிலிருந்து சின்ன பந்து போல் எடுத்து அதை மெதுவடை போல் தட்டி கொள்ளவும்.
 • எல்லா மாவையும் தட்டி கொண்டபிறகு ஒரு கடாயில் எண்ணெயை சூடாக்கவும், ஒரு சிட்டிகை மாவை சேர்த்து சரிபார்க்கவும், அது உடனடியாக எழுந்தால் அது சரியான நிலை.
 • இப்போது மிதமான தீயில் வைத்து எண்ணெயில் பாதுஷாக்களை சேர்த்துக்கொள்ளவும், ஒரு பக்கம் பொன்னிறமானதும் மறுபுறம் திருப்பி போட்டு பொன்னிறமாக வறுக்கவும் (அதிக தீயில் வறுக்க வேண்டாம்).
 • இரண்டு பக்கமும் பாதுஷா பொன்னிறமாக வறுத்தப்பிறகு பாதுஷாக்களை எண்ணெயிலிருந்து எடுத்து எண்ணெயை வடித்து தட்டிற்கு மாற்றிக் கொள்ளவும்.
 • பின்னர் உடனடியாக தயாரிக்கப்பட்ட சர்க்கரை பாகில் சேர்க்கவும். இருபுறமும் நன்கு நனைத்து, 2 நிமிடம் மூழ்கியபிறகு அதிலிருந்து எடுத்து தட்டில் மாற்றவும், 2-3 மணி நேரம் வைத்தால் மிகவும் சுவையாக இருக்கும், அப்போதுதான் சர்க்கரை பாகு உள்ளே நன்றாக செட் ஆகும்.
 • இப்பொழுது பாதுஷா ரெடி பாதுஷாவை மகிழுங்கள்!

Video

Keyword BADUSHA, Badusha recipe, Badusha Recipe in tamil, பாதுஷா ரெசிபி

புகைப்படத்துடன் செய்முறை :

1.பாதுஷா செய்வதற்கு முதலில் ஒரு பாத்திரம் எடுத்து அதில் 1 கப் அளவிற்கு மைதா சேர்க்கவும்.

Badusha

2.மைதாவுடன் 1/4 டீஸ்பூன் சமையல் சோடா 1/4 டீஸ்பூன் பேக்கிங் பவுடர் ஒரு சிட்டிகை உப்பு 1/2 டீஸ்பூன் சர்க்கரை இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக கலக்கவும்.

 • Badusha
 • Badusha
 • Badusha
 • Badusha
 • Badusha

3.சேர்த்த அனைத்தையும் கலந்தவுடன் 1/4 கப் அளவிற்கு நெய் சேர்த்து அதனுடன் மீண்டும் நன்றாக கலக்கவும்.

Badusha

4.நெய் சேர்த்து கலந்தவுடன் அது பார்க்க பிரெட் கிராம்ப்ஸ் போல் இருக்கும் அதன் பிறகு சிறிது சிறிதாக அதில் தண்ணீர் சேர்த்து கலக்கவும்.

 • Badusha
 • Badusha

5.கலந்தவுடன் மாவை இழுத்தாள் இழுக்கக்கூடிய பதத்தில் இருக்க வேண்டும், இதுதான் பாதுஷா செய்வதற்கு சரியான பதம்.

 • Badusha
 • Badusha

6.பாதுஷா மாவை தயார் செய்த பிறகு 10லிருந்து 15 நிமிடங்கள் வரை ஊறவிட வேண்டும்.

Badusha

7.பாதுஷா மாவு ஊறுவதற்குள் சர்க்கரைப்பாகு தயார் செய்து கொள்ளலாம், சர்க்கரை பாகை செய்ய ஒரு பாத்திரத்தில் 1 கப் அளவிற்கு சர்க்கரை மற்றும் 1/2 கப் அளவிற்கு தண்ணீர் சேர்க்கவும்.

 • Badusha
 • Badusha

8.சர்க்கரை முழுவதும் அந்த தண்ணீரில் கரைய வேண்டும், சர்க்கரை கரைந்து தண்ணீர் கொதிக்கும்போது அதில் ஒரு சிட்டிகை குங்குமப்பூ 1/4 டீஸ்பூன் ஏலக்காய் பொடி சேர்த்து நன்றாக கலக்கவும்.

 • Badusha
 • Badusha

9.பேக்கரி பாதுஷாவை போல் நிறம் வேண்டுமென்றால் ஒரு சிட்டிகை கேசரி பவுடர் சேர்த்துக் கொள்ளவும், ஆனால் இது கட்டாயமல்ல உங்களது விருப்பம் தான்.

Badusha

10.மூன்றிலிருந்து ஐந்து நிமிடங்கள் சக்கரை தண்ணீரை நன்றாக கொதித்த பிறகு, சர்க்கரை பாகுகள் ஒற்றை சரம் நிலைத்தன்மைக்கு உருவாகும்(இதை கம்பி பதம் என்றும் கூறுவர்), உங்களுக்கு வேண்டுமென்றால் சிறிதளவு எலுமிச்சை சாறு இதில் சேர்த்துக் கொள்ளலாம்.

Badusha

11.சர்க்கரைப் பாகை தயார் செய்த பிறகு அதை ஓரம் வைக்கவும் அதன் பிறகு ஊறவைத்த பாதுஷா மாவிலிருந்து சின்ன பந்து போல் எடுத்து அதை மெதுவடை போல் தட்டி கொள்ளவும்.

 • Badusha
 • Badusha
 • Badusha
 • Badusha
 • Badusha

12.எல்லா மாவையும் தட்டி கொண்டபிறகு ஒரு கடாயில் எண்ணெயை சூடாக்கவும், ஒரு சிட்டிகை மாவை சேர்த்து சரிபார்க்கவும், அது உடனடியாக எழுந்தால் அது சரியான நிலை.

Badusha

13.இப்போது மிதமான தீயில் வைத்து எண்ணெயில் பாதுஷாக்களை சேர்த்துக்கொள்ளவும், ஒரு பக்கம் பொன்னிறமானதும் மறுபுறம் திருப்பி போட்டு பொன்னிறமாக வறுக்கவும் (அதிக தீயில் வறுக்க வேண்டாம்).

 • Badusha
 • Badusha

14.இரண்டு பக்கமும் பாதுஷா பொன்னிறமாக வறுத்தப்பிறகு பாதுஷாக்களை எண்ணெயிலிருந்து எடுத்து எண்ணெயை வடித்து தட்டிற்கு மாற்றிக் கொள்ளவும்.

 • Badusha
 • Badusha
 • Badusha
 • Badusha

15.பின்னர் உடனடியாக தயாரிக்கப்பட்ட சர்க்கரை பாகில் சேர்க்கவும். இருபுறமும் நன்கு நனைத்து, 2 நிமிடம் மூழ்கியபிறகு அதிலிருந்து எடுத்து தட்டில் மாற்றவும், 2-3 மணி நேரம் வைத்தால் மிகவும் சுவையாக இருக்கும், அப்போதுதான் சர்க்கரை பாகு உள்ளே நன்றாக செட் ஆகும்.

 • Badusha
 • Badusha

16.இப்பொழுது பாதுஷா ரெடி பாதுஷாவை மகிழுங்கள்!

 • Badusha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recipe Rating